ஆண்மை தவறேல் – 25

(Tamil Kama Stories - Aanmai Thavarael 25)

Raja 2013-12-08 Comments

“என்ன ஆச்சு..?”

கற்பகம் கேட்க, கடந்த சில வாரங்களாக நந்தினி நடந்து கொள்ளும் முறைகளை பற்றி அசோக் அவளிடம் பொறுமையாக விளக்கினான். முக்கியமாக அன்றொரு நாள் இரவு அவனுடைய காலேஜ் ஆல்பத்தை எடுத்துக்கொண்டு வந்து வழிந்தது, அடுத்த நாள் காலை காபி அருந்துகையில் அவள் உருகியது.. எல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் பொறுமையாககேட்டுக் கொண்டிருந்த கற்பு, அவன் சொல்லி முடித்ததும் நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டவாறு, சற்றே கிண்டலான குரலில் சொன்னாள்.

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சந்தேகமே இல்லை.. அம்மணிக்கு உன் மேல லவ்ஸ் பிச்சுக்கிச்சு..”

“ஹேய்.. வெளையாடாத கற்பு..”

“நான் என்ன வெளையாடுறேன்..? நீ சொன்னதை வச்சுதான் சொல்றேன்.. அவ உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..!! ஐ’ஆம் ஹண்ட்ரட் பர்சண்டேஜ் ஷ்யூர்..!!”

“எனக்கும் அந்த டவுட்டு இருக்கு கற்பு.. ஆனா..”

“என்ன ஆனா..??”

“அவ ஏன் இப்படிலாம் அறிவில்லாம பண்ணுறா..??”

“அட கொடுமையே.. கட்டுன புருஷனை லவ் பண்றது அறிவுகெட்டதனமா..?”

“ப்ச்.. என்ன கற்பு.. நீயும் புரியாம பேசிக்கிட்டு..?? எதையும் எதிர் பார்க்க கூடாதுன்னு கண்டிஷன் போட்டுத்தான கல்யாணமே பண்ணிக்கிட்டோம்..??”

“நீதாண்டா புரியாம பேசுற.. இதுலாம் கண்டிஷன் போட்டு கண்ட்ரோல் பண்ணி வைக்கிற விஷயமாடா..?? நம்ம ஊர் பொண்ணுகளுக்குலாம் தாலி கட்டுனவுடனே எங்க இருந்துதான் வருமோ.. புருஷன் மேல அந்த பிரியமும், பொசசிவ்னசும்..!! பொண்ணுகளை பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை அசோக்.. நீ பழகுற அந்த மோசமான பொண்ணுகளை பாத்து பாத்து.. எல்லாம் அப்படித்தான் இருப்பாங்கன்னு நெனச்சுட்டியோ என்னவோ..?? உண்மையான ஒரு தமிழ்ப்பொண்ணை இப்பத்தான பாக்குற.. போக போக பொண்ணுகளை பத்தி நல்ல புரிஞ்சுக்குவ..!!”

“என்ன பூச்சாண்டி காட்டுறியா..??”

“இல்ல.. என மனசுக்கு தோணுனதை சொல்றேன்..”

“என்ன தோணுது உன் மனசுல..?”

“கூடிய சீக்கிரம் நீ பொண்டாட்டிதாசன் ஆக போறேன்னு தோணுது..”

“ஹாஹா.. அந்தக்கதைதான் இங்க நடக்காது.. நான் எப்போவும் மாறவே மாட்டேன்..!!”

“பேசு தம்பி பேசு.. நல்லா பேசு..!! உனக்கு பாடம் சொல்லி தந்த வாத்தியாரே.. அங்க ஒருத்திக்கிட்ட மண்ணை கவ்விட்டாரு..!!”

“புருசை சொல்றியா..?? அவன் கெடக்குறான்.. அவனுக்கு வேற வழி இல்ல.. மாறிட்டான்..!! எனக்கு அந்த மாதிரி ஒரு நெலமை எப்போவும் வராது..!!” அசோக் அந்த மாதிரி எகத்தாளமாக சொல்ல, கற்பகம் இப்போது சற்றே சீரியசான குரலில் சொன்னாள்.

“இங்க பாரு அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!! இன்னும் கூட ஒன்னும் கெட்டு போகலை.. நீ இவ்வளவு மோசமானவன்னு தெரிஞ்சும் உன் பொண்டாட்டி உன்னை லவ் பண்றா..!! இதைவிட உனக்கு என்ன வேணும்..?? எல்லாத்தையும் விட்டுட்டு.. உன் பொண்டாட்டிக்காக கொஞ்சம் மாறித்தான் பாரேன்..??”

“ஹாஹா..!! இவளுக்காக.. என் சந்தோஷத்தைலாம் விட்டுட்டு.. நான் மாறனுமா..?”

“ஏன்.. மாறினா என்ன..?? அந்த புருஷோத்தமன் மாறலை..??”

“அவன் பொண்டாட்டி அவனுக்காக என்னன்னவோ தியாகம் பண்ணிருக்கா.. அவன் மாறிட்டான்..!! இவ எனக்காக என்ன பண்ணிருக்கா..??” அசோக் கிண்டலாக கேட்க,

“ஹ்ம்ம்.. உன்னை மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிறதே ஒரு பெரிய தியாகந்தாண்டா..?? இதுல புதுசா லவ்வு வேற மொளைச்சிருக்கு.. இதுக்காகவாவது நீ மாற கூடாதா..??” கற்பகமும் கிண்டலாகவே பதிலளித்தாள்.

“ஹாஹா.. எதுக்காகவும் நான் மாறுறதா இல்ல..”

“ம்ம்.. இப்படியே பேசிட்டு திரி.. ஒருநாள் எல்லாத்துக்காகவும் நல்லா ஃபீல் பண்ண போற..!!”

“சரி அதை விடு.. மதியம் அவ உன்கிட்ட என்ன சொன்னான்னு சொல்லு..!!”

“உடனே பேச்சை மாத்திடுவியே..?? ம்ம்ம்ம்… அவ என்ன சொன்னா.. அப்டியே.. மூஞ்சியை சொர்ணாக்கா மாதிரி டெரரா வச்சுக்கிட்டு.. கண்ணுல அப்டியே ரெட் பல்பு எரிய.. என்னென்னவோ சொன்னா..!! நான் அப்படியே பயந்து நடுங்கி போயிட்டேன்..!! ஆனா ஒன்னுடா.. நீ சொன்னப்போ நான் நம்பலை.. இன்னைக்குத்தான் தெரிஞ்சது..!!”

“என்ன..?”

“உன் பொண்டாட்டி மேடத்துக்கு கொஞ்சம் கொலஸ்ட்ரால் ஜாஸ்திதான்..!!”

“ஹாஹா.. அப்படி என்ன சொன்னா..?”

“ஆனா அவளை சொல்லியும் குத்தம் இல்ல.. எல்லாம் உன்னாலதான்..!!”

“என்னாலயா..?”

“ஆமாம்..!! ‘காலிப் பசங்க கூடலாம் சேராதடி கற்பகம்..’ன்னு எங்க அம்மா சின்ன வயசுலேயே அடிக்கடி சொல்வாங்க.. அதெல்லாம் மறந்துட்டு உன்னை மாதிரி ஒரு கழிசடைப்பய கூட சேர்ந்தேன் பாரு.. அதான் இந்த திட்டுலாம் கேக்குறேன்..!!”

“ஹேய்.. என்ன சொன்னான்னு சொல்லு..”

“உங்களுக்கும் அவருக்கும் நடுவுல என்ன ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு எனக்கு தெரியாது..” கற்பகம் நந்தினி சொன்னது மாதிரி உதட்டை சுளித்து சொல்லிக்காட்டி கேலி செய்தாள். அசோக் சிரித்தான்.

“ஹாஹாஹாஹா..!!”

“அப்படியே அவ கொமட்டுல ரெண்டு குத்தலமான்னு இருந்தது எனக்கு.. பாவம்னு விட்டுட்டேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!”

“சிரிக்கிறியா..?? சிரி மவனே சிரி..!! உன்னை மாதிரி ஆள் கூட சகவாசம் வச்சுக்கிட்டதுக்கு.. உன் பொண்டாட்டி என்னை ஏறிட்டு போறா..!!”

கற்பகம் சொன்னவிதம் அசோக்கிற்கு மேலும் சிரிப்பையே வரவழைத்தது. வாய் விட்டு சிரித்தான்.. அதன் பிறகு வரப்போகிற சம்பவங்களின் தீவிரம் உணராதவனாய்..!! Sunni Oombum Tamil Kama Stories

– தொடரும்

ஆண்மை தவறேல் – 25

What did you think of this story??

Comments

Scroll To Top