நெஞ்சோடு கலந்திடு – 4

(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 4)

Raja 2014-01-03 Comments

Tamil Kama Stories – அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் ஹாலுக்குள் பிரவேசிக்க, சித்ரா கப்சிப் ஆனாள். மிக்ஸி ஜாரை திறந்து அரைபட்ட தேங்காயை வழித்தெடுக்க ஆரம்பித்தாள். திவ்யா தலையை குனிந்தவாறே நடந்து வந்தாள். இவர்கள் இருவரையும் கடக்கும்போது,

“மொட்டை மாடிக்கு வா..!!”

என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றாள். கதவை திறந்து வெளியேறினாள். திவ்யா செல்லும்வரை அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக்கொண்டிருந்த சித்ரா, அவள் சென்றதும் தன் தம்பியிடம் திரும்பி எரிச்சலாக கேட்டாள்.

“எதுக்குடா மொட்டை மாடிக்கு வர சொல்றா..?”

“எனக்கு எப்படிக்கா தெரியும்..? போனாத்தான் தெரியும்..” சொல்லிக்கொண்டே அசோக்கும் வாசலை நோக்கி நகர, சித்ரா அவனுக்கு பின்னால் இருந்து கத்தினாள்.

“போ.. போ.. உன் போக்கே சரியில்ல தம்பி..!! என்னைக்கோ ஒருநாள் மூக்கை சிந்திக்கிட்டு எங்கிட்டத்தான் வந்து நிக்கப் போற..!!”

அக்காவுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தாது அசோக் வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகளை அடைந்து மேலேறினான். மொட்டை மாடியை அடைந்தான். திவ்யா அங்கே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு இவனுக்காக காத்திருந்தாள். இவன் சென்றதும், சற்றே வெறுப்பாக கேட்டாள்.

“என்ன சொல்றா.. உன் அருமை அக்கா..? ஓவரா சவுண்டு வுடுறா..?”

“ஏய்.. என்னதான் இருந்தாலும் அவ உன் அண்ணன் பொண்டாட்டிடி.. கொஞ்சம் மரியாதையா பேசு..”

“போ போ.. அவளைலாம் என்னால அண்ணியா ஏத்துக்க முடியாது..!!”

“ஐயோ.. கடவுளே..!! திருந்தமாட்டேன்னு அடம் புடிக்குறீங்க ரெண்டு பேரும்..!! சரி சரி.. ஏத்துக்க முடியாம போனா வேணா போகட்டும்..!! நான் எடுத்துக்கிட்டு வர சொன்னதை எடுத்துட்டு வந்தியா..?”

“ம்ம்.. ஒண்ணுதான் எடுத்துட்டு வந்தேன்.. போதும்ல..?”

“போதும் போதும்.. எடு..!!”

அசோக் சொன்னதும் திவ்யா தன் ஷர்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுத்தாள். அது.. சிகரெட்..!! சற்று முன்பு அசோக் சைகையாலே அவளிடம் எடுத்து வர சொன்ன சிகரெட்..!! தன் அண்ணனின் பாக்கெட்டில் இருந்து ஆட்டையை போட்டு அவள் எடுத்து வந்த சிகரெட்..!! அதை கையில் எடுத்தவள், மூக்குக்கு அருகே எடுத்து சென்று முகர்ந்து பார்த்தாள். உடனே முகத்தை சுளித்து ‘உவ்வே..!!’ என்றாள்.

“கருமம்.. இந்த நாத்தம் நாறுது.. எப்படித்தான் இதை குடிக்கிறீங்களோ..?”

“ம்ம்ம்.. தீப்பெட்டியை எடு.. குடிச்சு காட்டுறேன்..”

சிகரெட்டை அவளிடம் இருந்து பறித்துக்கொண்டே அசோக் கிண்டலாக சொல்ல, திவ்யா தன் இடுப்பில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அசோக் தீக்குச்சி கிழித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊதினான். அவன் புகை விடுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த திவ்யா சற்றே சலிப்பான குரலில் சொன்னாள்.

“சின்ன வயசுல இருந்து.. உனக்கு எதையாவது வீட்டுலருந்து திருடிக் குடுக்குறதே எனக்கு பொழப்பா போச்சு..!!”

“ஏன்.. என்னாச்சு.. ரொம்பத்தான் சலிச்சுகுற..?”

“பின்ன என்ன..? சிகரெட் அடிக்கடி காணாம போகுதே.. ஒருவேளை தங்கச்சி தம்மடிக்க ஆரம்பிச்சுட்டாளோன்னு என் அண்ணன் தப்பா நெனச்சுக்க போறான்..!!”

“சரி சரி.. விடு.. இனிமே உன்னை சிகரெட் எடுத்துட்டு வர சொல்ல மாட்டேன்.. ப்ராமிஸ்..!!”

“அப்படியே.. இனிமே சிகரெட்டே பிடிக்க மாட்டேன்னு ஒரு ப்ராமிஸ் பண்ணிடேன்..?”

“போடீ.. அதுலாம் நம்மால முடியாது..”

“ம்ம்ம்… நான்லாம் சொல்லியா நீ கேட்க போற..? அதுக்குலாம் ஆளு வந்தாத்தான் நீ அடங்குவ..!! பொண்டாட்டி வந்து ‘பொளேர்.. பொளேர்..’னு நாலு அறை விட்டதுந்தான்.. நீ தம்மடிக்கிறதை விட போற..”

“ஹாஹா.. அதுக்குலாம் சான்சே இல்ல..”

“ஏன்..?”

“நான்தான் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையே..?”

“என்னடா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட..?”

“எனக்கு இந்த காதல், கல்யாணம்.. இதுலலாம் நம்பிக்கையே இல்லை திவ்யா..!!”

“ம்ம்ம்.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்குப்பா..!!”

“காதல்லயா..? கல்யாணத்துலயா..?”

“காதல்க்கல்யாணத்துல..!!”

“ஓ..!! அப்போ.. மேடம் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா..?”

“ஆமாம்..!! முன்னப்பின்ன தெரியாத ஒருத்தனுக்கு எப்படி அசோக் கழுத்தை நீட்டுறது..? அவனை நம்பி எப்படி என் லைஃபை ஒப்படைக்கிறது..? ஸோ.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது காதல்க் கல்யாணம்தான்..!!”

“ம்ம்.. நல்ல முடிவுதான்..!!”

அசோக் புகையை ஊதிக்கொண்டே சொல்ல, திவ்யா இப்போது ஆகாயத்தை வெறித்து.. அந்தரத்தில் பார்வையை பதித்தவாறு.. கண்களில் எதிர்கால கனவுடன் சொன்னாள்.

“எனக்குன்னு ஒருத்தன் இந்நேரம் பொறந்திருப்பான் அசோக்.. எனக்காக உருகப் போறான்.. என்னை உள்ளங்கைல வச்சு தாங்கப் போறான்.. எனக்காகவே வாழப் போறான்..!! அவனை தேடி.. கண்டுபிடிச்சு.. பேசி.. பழகி.. திகட்ட திகட்ட காதலிச்சு.. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கணும்..!!”

“ம்ம்.. உனக்கு வரப் போறவன் எந்த மாதிரி இருக்கணும்..?”

“அப்டிலாம் பெருசா ரெஸ்ட்ரிக்சன் எதுவும் இல்ல..!! எந்த மாதிரி இருக்க கூடாதுன்னு வேணா சொல்றேன்..”

“சொல்லு..”

“தம்மடிக்க கூடாது..”

“ம்ம்..”

“தண்ணியடிக்க கூடாது..”

“ம்ம்..”

“வேற பொண்ணை சைட் அடிக்க கூடாது..”

“சுருக்கமா சொன்னா.. என்னை மாதிரி இருக்க கூடாது..??”

“ஹாஹா..!! ஆமாம் ஆமாம்..!! ம்ம்ம்.. இது இல்ல.. நீ என்னோட பேஸிக் கண்டிஷன்லையே ஃபெயில் ஆயிடுவ..!!”

“அது என்ன கண்டிஷன்..?”

“எனக்கு புருஷனா வரப் போறவன்.. சத்தியமா சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வொர்க் பண்ணக் கூடாது..!!”

“அடிப்பாவி.. இப்படி ஒரு கண்டிஷனா..? அப்படி என்ன சாப்ட்வேர் ஆளுங்க மேல உனக்கு கோவம்..?”

“என்னவோப்பா..!! எனக்கு உங்க இண்டஸ்ட்ரியே புடிக்கலை.. ஆளுங்களும்.. அவங்க கல்ச்சரும்..!!”

“ம்ம்.. அவ்ளோதான் கண்டிஷனா..? இல்ல.. இன்னும் இருக்கா..?”

“இன்னும் ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கு..”

“என்ன..?”

“அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!! எனக்காக.. என்னை நெனச்சு.. நெறைய கவிதை எழுதி தள்ளனும்.. நான் அதை படிச்சு படிச்சு ரசிக்கனும்..!!”

“கிழிஞ்சது.. உனக்கு நான் மேரேஜ் அப்ளிகேஷன் அனுப்பிச்சா.. என் ரெஸ்யுமே ஷார்ட்லிஸ்ட் கூட ஆகாது போல இருக்கே..?”

“ஹாஹா..!! உன் ரெஸ்யுமேதான் எல்லாத்துக்கும் கீழ.. அடில கிடக்கும்..!!”

“ஹ்ம்ம்…”

“ஆனா.. ஃப்ரண்ட்ஷிப் அப்ளிகேஷன் அனுப்பிச்சு பாரு.. உன் ரெஸ்யுமே தவிர.. வேற எதையும் நான் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்..!!”

அவ்வளவு நேரம் முகத்தில் ஒரு சிரிப்புடனே பேசிக்கொண்டிருந்த திவ்யா, திடீரென அந்த மாதிரி சீரியஸாக சொல்லிவிட்டு, அசோக்கின் முகத்தை அன்பு ஒழுக பார்க்க.. இப்போது அசோக்கும் அப்படியே நெகிழ்ந்து போனான். திவ்யாவின் கண்கள் லேசாக கலங்கின. அசோக் உரிமையாக அவளுடைய தோளில் கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“ஹேய்.. லூசு.. என்ன இது..?”

“ஆமாம் அசோக்.. எனக்கு லைஃப் ஃபுல்லா உன் ஃப்ரண்ட்ஷிப் வேணுண்டா..!! எப்போவும் என்கூடவே இருக்கணும்..!!”

“ப்ச்.. உன்னை விட்டு நான் எங்க போயிடுவேன்..? உன்கூடதான் இருப்பேன்.. எப்போவும்..!! சரியா..?”

“ம்ம்..”

“சரி வா.. கீழ போகலாம்..!! அக்கா தேடிட்டு இருப்பா..!!”

சொல்லிவிட்டு அசோக் சிகரெட்டை சுண்டி எறிந்தான். இருவரும் படியிறங்கி கீழே வந்தார்கள். திவ்யா மீண்டும் அவள் அறைக்குள் சென்று முடங்கிக்கொள்ள, அசோக் கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே சித்ரா சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தாள்.

“சுட்டது போதும்.. பசிக்குது.. எடுத்துக்குறேன்..”

என்று கல்லில் கிடந்த சப்பாத்தியை அசோக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த மாதிரி எடுக்க அவன் குனிந்தபோது, அசோக்கின் மூச்சுக்காற்று சித்ராவின் முகத்தில் மோத, அவள் படக்கென்று முகத்தை சுளித்தாள். கையில் வைத்திருந்த தோசைக் கரண்டியாலேயே அசோக்கின் தலையில் ஒரு போடு போட்டாள். அசோக் அலறினான்.

“ஆஆஆஆ…!! ஏண்டி அடிக்கிற..?”

“எருமை மாடு..!! போய் தம்மடிச்சுட்டு வந்தியா..?”

“தம்மா..? அதுலாம் ஒண்ணுல்ல..” சொல்லியவாறே, சப்பாத்தியை ஒரு தட்டில் போட்டுக்கொண்டான்.

“பொய் சொல்லாத.. அதான் குப்புன்னு நாறுதே..? இதுக்குத்தான் உன்னை மொட்டை மாடிக்கு வர சொன்னாளா..? அவதான் உன்னை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?”

“இல்ல இல்ல..”

“நீ மட்டுந்தானா..? இல்ல.. அவளும் அடிக்கிறாளா..?”

“ஐயையே..!! அவள்ளாம் இல்ல.. நான் மட்டுந்தான்..!! அவ அப்புராணிக்கா.. அவளைப் போய் சந்தேகப் படுறியே..?”

“நீதான் மெச்சிக்கணும்..!! அவளலாம் நம்ப முடியாது.. அடிச்சாலும் அடிப்பா..!!”

“ப்ச்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..? அப்புறம் என்ன நொய்நொய்ன்னு..? ஆமா.. இதென்ன.. சப்பாத்திக்கு தேங்கா சட்னி பண்ணிருக்குற..?”

“அது சப்பாத்திக்கு இல்ல.. தோசைக்கு..!!”

“தோசையா..? ஏன்.. உன் வீட்டுகாரருக்கு ஒரு ஐட்டம் பத்தாதா..? எல்லாரும் உயிர் வாழ்றதுக்காக சாப்பிடுவாங்க.. மனுஷன்.. சாப்பிடுரதுக்காகவே உயிர் வாழ்றான்யா..!!”

Comments

Scroll To Top