நெஞ்சோடு கலந்திடு – 30

(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 30)

Raja 2014-01-31 Comments

Tamil Kama Stories – “ச்சை.. என்ன பேசுற நீ..? அவ போனா.. போய்த் தொலையுறான்னு விட மாட்டியா..? அவளையே நெனச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை பாழாக்கிப்பியா..?”

“உனக்கு என்ன..? உன் கூந்தல்ல இருந்து எதோ வுழுந்துட்ட மாதிரி சொல்வ..? நாந்தான அவளை லவ் பண்ணினேன்.. என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்..??”

“என்ன உன் கஷ்டம்.. பெரிய கஷ்டம்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனடா.. அவ உனக்கு வேணாம் வேணாம்னு.. அறிவில்லாம காதலிச்சுட்டு.. இப்போ அவஸ்தைப்படுற..!! சரி.. அது கெடக்கட்டும்.. !! செல்லை எதுக்கு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குற.. அப்பா கால் பண்ணி கத்துறாரு..!!”

“அவர் தேவையில்லாம சும்மா சும்மா கால் பண்றாருக்கா.. அவன் அவன் இங்க நொந்து போயி கெடக்குறான்.. அவரு கால் பண்ணி ‘நல்லா இருக்கியா நல்லா இருக்கியா’ன்னு நாப்பது தடவை கேக்குறாரு.. அதான் ஆஃப் பண்ணி போட்டேன்..!! என்னை டார்ச்சர் பண்ண வேணாம்னு அவர்கிட்ட கொஞ்சம் சொல்லி வையி..!!”

“அப்படியே அறைஞ்சன்னா..?? அவர் உன்னை பெத்தவருடா.. நல்லா இருக்கியான்னு கேட்க கூடாதா..? அங்க அம்மாவும், அப்பாவும் உனக்கு என்னாச்சோன்னு துடிச்சு போய் கெடக்காங்க..!! இரு.. நான் அவருக்கு கால் பண்றேன்.. மொதல்ல அவர்கிட்ட நாலு வார்த்தை பேசு..!!”

“போடு போடு.. பேசுறேன்..!! ஆனா.. இன்னொரு தடவை நல்லாருக்கியான்னு கேட்டா.. செத்து பொணமாயிட்டேன்னு சொல்லிருவேன் பாத்துக்கோ..”

“ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..?”

“நான் என்ன வதைக்கிறேன்.. நீ ஃபோனை போடு.. நான் பேசுறேன்..”

“விடு.. நீ ஒன்னும் பேச வேணாம்…”

“குடுக்கா..”

“சொல்றேன்ல..? விடு.. இந்த நெலமைல நீ ஒன்னும் பேச வேணாம்.. நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்.. நீ நாளைக்கு காலைல.. போதைலாம் தெளிஞ்சப்புறம் அவர்கிட்ட பேசு..!!”

“சரி விடு.. உன் இஷ்டம்..”

“மொதல்ல நீ ரூமுக்குள்ள போ..” சித்ரா அசோக்கின் கையை பிடிக்க, அவன் உதறினான்.

“விடுக்கா.. நானே வரேன்..”

நடந்தவன் ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்பான். அதற்கே தடுமாறினான். சித்ரா அவனை தாங்கி பிடித்துக் கொண்டாள்.

“என் மேல கை போட்டுக்கடா.. அக்கா உன்னை கூட்டிட்டு போறேன்..”

“என்னை என்ன புதுசா குடிக்கிறவன்னு நெனச்சியா..? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன்.. இதுவரைக்கும் என் குடியுலக வாழ்க்கைல.. நான் வாமிட்டே எடுத்தது இல்லை.. தெரி.. ஓஓஓஓவ்வ்வ்வ்வ்..!!!!”

சொல்லி முடிக்கும் முன்பே அசோக் வாந்தி எடுக்க ஆரம்பித்தான். குடித்த விஸ்கியையும், அரைத்த சிப்சையும் வாய் வழியாக வெளியே கொட்டினான். சித்ரா பதறிப் போனாள். தம்பியின் நிலையை கண்டு கலங்கிப் போனாள். அவன் குனிந்து வாந்தி எடுக்க, இவள் சென்று அவனுடைய தலையை இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டாள். அவனோ அவளுடைய கையை தட்டிவிட்டான். வயிற்றை பிடித்துக்கொண்டு அந்த மொட்டை மாடியின் மையத்திலேயே குடம் குடமாய் வாந்தி எடுத்தான்.

சித்ரா அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள். பார்க்க பார்க்க அவளால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். செல்வாவோ செய்வதறியாது திகைத்து, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வயிற்றில் இருந்ததை எல்லாம் அசோக் வெளியில் கொட்டிய பிறகு, சித்ராவும் செல்வாவும் அவனை அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தினார்கள். அவன் வாந்தி எடுத்ததை சுத்தம் செய்கிறேன் என்று சொன்ன சித்ராவிடம், ‘விடும்மா.. நான் பாத்துக்குறேன்..’ என்று கூறினார் செல்வா. ஒரு பக்கெட் நிறைய தண்ணீரும், விளக்குமாறும் எடுத்துக்கொண்டு சென்று, நீரை ஊற்றி ஊற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

சித்ரா அசோக்கின் அறைக்கு திரும்பினாள். விழிகள் செருக உறங்கிக் கொண்டிருந்த தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய முகத்தையே அமைதியாக பார்த்தாள். அசோக்கின் உடல் சலனமில்லாமல் கிடக்க, அவனுடைய உதடுகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தான். சித்ரா தன் காதுகளை கூர்மையாக்கி, அவன் என்ன முனகுகிறான் என்று கேட்டாள்.

“தி..திவ்யா.. தி..திவ்யா.. தி..திவ்யா..”

சித்ராவுக்கு இப்போது அழுகையை அடக்க முடியவில்லை. உதடுகள் துடிதுடிக்க அழுதாள். ‘என் தம்பியின் வாழ்க்கையை எப்படி ஆக்கி வைத்திருக்கிறாள் அந்த பாதகத்தி..? கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துக்கொண்டு எவ்வளவு சந்தோஷமாய் திரிவான் என் தம்பி..? இப்படி சுணங்கிப்போய் சுருண்டு படுக்க வைத்துவிட்டாளே..? சிறு வயதில் இருந்து இவன் அழுதே நான் பார்த்தது இல்லையே..? இன்று தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கின்றானே..?’

சித்ரா அசோக்கின் தலைமுடியை இதமாக கோதி விட்டாள். உடனே அசோக் தன் இமைகளை திறந்து அக்காவை பார்த்தான். இருவரும் ஒரு சில வினாடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்புறம் சித்ரா ஆற்றாமை தாளாமல் கேட்டாள்.

“ஏண்டா தம்பி இப்படிலாம் பண்ற..? அக்காவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?”

“நான் ஏன் இப்படிலாம் பண்றேன்னு உனக்கு தெரியலையாக்கா..?”

“தெ..தெரியலைடா..”

“நெஜமா தெரியலை..?”

“ம்ஹூம்..”

“என்னால திவ்யா இல்லாம இருக்க முடியாதுக்கா..!! அவ எனக்கு வேணும்க்கா.. அவ எனக்கு வேணும்..!! என் காதலியாவோ, என் பொண்டாட்டியாவோ கூட அவ எனக்கு வேணாம்.. எப்படியோ அவ என் லைஃப்ல இருந்தா போதும்..!! இத்தனை நாளா அவளுக்கு என் மேல காதல் இல்லைன்னு தெரிஞ்சா கூட.. அவகூட பேசிக்கிட்டு.. அவ சிரிப்பை பாத்துக்கிட்டு.. அவளை என் நெஞ்சுல சாச்சுக்கிட்டு.. சந்தோஷமா இருந்தேன்க்கா.. இப்போ அந்த சந்தோசம் கூட எனக்கு இல்லையேக்கா..? நான் என்ன பண்ணுவேன்..?” அசோக்கின் கண்களில் இருந்து இப்போது நீர் கசிய ஆரம்பித்தது. உடனே சித்ராவுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது.

“அவ இல்லைன்னா என்னடா.. நாங்கல்லாம் இல்லையா உனக்கு..?”

“அ..அவ எனக்கு முக்கியம்க்கா.. எ..எனக்கு.. வேற எதுவும் சொல்ல தோணலை..!!”

“அவளை அவ்ளோ புடிக்குமாடா உனக்கு..?”

சித்ரா உணர்ச்சிப் பூர்வமாக கேட்க, அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. அவனுடைய மனக்கண்ணில் ஒரு படம் ஓட ஆரம்பித்தது. சிறு வயதில் இருந்து திவ்யாவைப் பற்றிய அவனது நினைவுகள். திவ்யா சிரித்தது.. அழுதது.. வெட்கப்பட்டது.. கோவப்பட்டது.. கன்னம் கிள்ளியது.. காதை திருகியது.. தலையில் குட்டியது.. நெஞ்சில் சாய்ந்தது.. மடியில் உறங்கியது.. வெறுப்பாக பார்த்து அமில வார்த்தைகளை துப்பியது.. எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக.. வரிசையாக அவன் மனக்கண்ணில் ஓடியது..!! உதடுகளை பிரித்து மெல்லிய குரலில் சொன்னான்.

“புடிக்கும்க்கா.. ரொம்ப ரொம்ப புடிக்கும்..!!”

அவ்வளவுதான்..!! சித்ரா தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அவளுடைய மனதில் பலவித யோசனைகள்..!! இத்தனை நாளாய் அசோக் திவ்யாவை காதலிக்கிறான் என்பது அவளைப் பொறுத்தவரை ஒரு நகைப்புக்குரிய விஷயமாக இருந்தது. இன்று.. அந்த திவ்யா தன் தம்பியின் மனதில் எந்த அளவுக்கு ஆழமாய் பதிந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள். அவள் இல்லாமல் இனி இவன் சிரிக்கவே போவதில்லை என்று தோன்றியது. அப்படியே சிரித்தாலும் அது அடுத்தவர்களுக்காக பூசிக்கொள்ளும் அரிதார சிரிப்பாகவே இருக்கும்.

இல்லை.. இதை இப்படியே விடக் கூடாது..!! இப்படியே விட்டால் என் தம்பியின் வாழ்க்கை நாசமாக போய் விடும். அவளுடைய நினைவில் இவன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட தயங்க மாட்டான். இவனுடைய வாழ்க்கையை காப்பாற்ற நான் என்ன செய்யப் போகிறேன்..? சற்று முன் அப்பா சொன்னாரே..? ‘அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?’ இதுவரை இவனுக்கு அம்மா போலவா நான் நடந்து கொண்டிருக்கிறேன்..? என்ன செய்யலாம்..? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

“அசோக்..” தம்பியை அன்பாக அழைத்தாள்.

“ம்ம்..”

“அக்கா மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..?”

“ம்ம்.. இருக்குக்கா..”

“சரி.. இப்போ அக்கா சொல்றேன் கேட்டுக்கோ..!! அவளை உன்கூட அக்கா சேர்த்து வைக்கிறேன்..!! நம்ம ஊரு சனமெல்லாம் கூடியிருக்க.. நீ திவ்யா கழுத்துல தாலி கட்ட.. அவ உன் கையை புடிக்க.. நான் அவ கையை புடிச்சு.. அக்னியை சுத்தி வரத்தான் போறோம்..!! இது கண்டிப்பா நடக்கும்..!! இப்போ நீ எந்த கவலையும் இல்லாம.. நிம்மதியா தூங்கு..!!”

“அக்கா..” அசோக் அக்காவையே நம்பமுடியாமல் பார்த்தான்.

“அக்கா சொல்றேன்ல.. தூங்கு..!!”

சித்ரா அசோக்கின் தலை முடியை கோதி விட, கொஞ்ச நேரத்திலேயே அவன் தூங்கிப் போனான். சித்ரா உடனே தன் வீட்டுக்கு கிளம்பி விடவில்லை. அவள் ஒரு முடிவுடன்தான் இருந்தாள். அசோக் உறங்கிய பிறகும் நெடுநேரம் செல்வாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். செல்வாவும் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்தார். அசோக்கை பற்றியும், திவ்யாவின் மீதான அவனுடைய காதலைப் பற்றியும் தனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சித்ராவிடம் கொட்டி தீர்த்தார்.

Comments

Scroll To Top